Latest Posts

All ஜோதிடம் 21 தர்மம் சாஸ்திரம் 54 பித்ரு ஆராதனம் 20 வாஸ்து 7 வைதீகம் 16 ஸ்ரீவைஷ்ணவம் 34

மனம் திருந்த, வாழ்வு தர்மத்தில் நிலைக்க, அன்றாட வாழ்வியல் நடைமுறைகள்!

பிறர் சொல்லுக்கு அசையும் மனதை, தர்மத்தின் வழியில் நிலைநிறுத்துவது எப்படி? ஆசையும் கோபமும் பொறாமையும் ஆளும் உள்ளத்தில், நற்குணங்களை வளர்ப்பது எப்படி? எண்ணத்தில் தெளிவும் சொல்லில் கனிவும் செயலில் நேர்மையும் வளர்க்கும் சாஸ்திர வழிகாட்டல்கள்! ஆசாரியர் காட்டிய நெறியில், அன்றாடப் பழக்கங்களால் வாழ்வைச் செம்மைப்படுத்துவோம்!

12 Oct 2026

ஒரு மரணத்தின் அடைப்பு காலத்தில் மற்றொரு மரணம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஒரு மரணத்தின் **“அடைப்பு”**, மற்றொரு மரணத்தின் அபரகர்மத்தைத் தடுத்து நிறுத்தாது! **அடைப்பு வேறு; அஶௌசம் (தீட்டு) வேறு; அஶௌச ஸந்நிபாதம் வேறு** — ஶாஸ்த்ரம் இவற்றைத் தெளிவாகப் பிரிக்கிறது. தோஷம் இருந்தால் ஶாந்தி; மரணம் ஏற்பட்டால் அதற்குரிய அபரகர்மம் — இதுவே ஶாஸ்த்ர வழி. **“அடைப்பு முடியட்டும்; பிறகு காரியம் செய்யலாம்” என்பது எல்லா மரணங்களுக்கும் பொருந்தும் ஶாஸ்த்ர விதியல்ல!**

12 Oct 2026

ஐப்பசித் திருத்திங்களின் பிரபாவமும் வைபவமும்: காவேரி, அரங்கன், ஆழ்வார், ஆசார்யர் என ஸ்ரீவைஷ்ணவ வைபவங்கள் ஒருங்கிணையும் புண்ணிய மாதம்!

கங்கையிற் புனிதமாய காவேரி துலா மாஹாத்மியம் பெறும் திருத்திங்கள் ஐப்பசி! முதலாழ்வார்கள் மூவர் திருவவதரித்து தமிழ்மறைக்கு ஒளியேற்றிய புண்ணிய மாதம்! ஸ்ரீமணவாள மாமுனிகள் திருவவதரித்து ஆசார்ய வைபவத்திற்கு மகுடம் சூட்டிய மாதம்! **அரங்கன், காவேரி, ஆழ்வார், ஆசார்யர் என அனைத்துப் பெருமைகளும் சங்கமிக்கும் வைபவத் திருத்திங்கள் ஐப்பசி!**

12 Oct 2026

இறந்த வீட்டில் பத்து நாட்கள் தங்கக்கூடாதா? சாஸ்திரம் சொல்லாததைச் சாஸ்திரமாக்காதீர்கள்!

இறந்த வீட்டில் பத்து நாள் தங்கினால் “தீட்டு ஒட்டும்” என்பது ஶாஸ்த்ரம் சொல்லாத பயமுறுத்தல்! ஆஶௌசத்தை நிர்ணயிப்பது உறவுமுறையே தவிர, ஒருவர் தங்கிய இரவுகளின் எண்ணிக்கை அல்ல! குடும்ப வழக்கத்தை ஶாஸ்த்ர விதியாக்கி, “பாதகம் வரும்” என்று துக்கத்தில் இருப்பவர்களை அச்சுறுத்தாதீர்கள்! **ஶாஸ்த்ரம் விதித்ததைப் பின்பற்றுவோம்; ஶாஸ்த்ரம் விதிக்காத தோஷத்தை நாமாக உருவாக்க வேண்டாம்!**

12 Oct 2026

கண்ணீர் மட்டுமா பாசத்தின் அடையாளம்? இறந்தவருக்காக அழுவதா, அவருக்குரிய கடமையைச் செய்வதா? — ஶாஸ்திரம் சொல்லும் தெளிவு

கண்ணீரின் அளவு பாசத்தின் அளவுகோல் அல்ல; செய்ய வேண்டிய தர்மமே உண்மையான அன்பின் அடையாளம். இறந்தவரை நினைத்து நம்மை நாமே தண்டித்துக் கொள்வதைவிட, அவருக்குரிய கர்மங்களை முறையாகச் செய்வதே ஶாஸ்திர வழி. தேறிக்கொண்டிருப்பவரை மீண்டும் நினைவூட்டி அழவைப்பது ஆறுதல் அல்ல; ஆறிக்கொண்டிருக்கும் காயத்தை மீண்டும் திறப்பதாகும். **மரணத்தை ஏற்றுக்கொள்வது மறப்பதல்ல; நினைவுகளைத் தாங்கிக்கொண்டு தர்மத்தோடு வாழக் கற்றுக்கொள்வதாகும்.**

12 Oct 2026

குலதெய்வமும் அதன் பிரபாவமும் - குலதெய்வ வழிபாட்டிற்கு ஶாஸ்த்ர சான்றுகள்

குலதெய்வம் வெறும் குடும்ப வழக்கமல்ல; அதன் வேர்கள் இதிகாச–புராணங்களிலேயே பதிந்துள்ளன! **“குலதேவீ குலம் பாது”** — குலத்தைக் காப்பவளாகக் குலதேவியை ஶாஸ்த்ரம் போற்றுகிறது. குலரக்ஷணம், பரம்பரைத் தொடர்பு, சுபகர்மங்களில் ஆராதனை — இவையே குலதெய்வ மரபின் ஶாஸ்த்ர அடித்தளங்கள். **குலதெய்வத்தை அறிவோம்; பிரமாணத்தோடு அதன் பிரபாவத்தைப் புரிந்துகொள்வோம்!**

10 Oct 2026

தந்தை உயிருடன் இருக்கும்போது பித்ரு கர்மம் உண்டா? தாய் மறைந்திருந்தால் ஶாஸ்திரம் காட்டும் வழி என்ன?

தந்தை உயிருடன் இருப்பதால் மறைந்த தாயின் வருடாந்திர ஶ்ராத்தம் நின்றுவிடாது; அதை மகன் தவறாமல் செய்ய வேண்டும். ஆனால் தாயின் மறைவை முன்னிட்டு அமாவாசை, மாதப்பிறப்பு, மஹாளய பக்ஷத்தில் தந்தையை மீறித் தனியாகத் தர்ப்பணம் செய்யக்கூடாது. **“மாதுஃ ஶ்ராத்தம் ப்ருதக் குர்யாத் பிதர்யபி ச ஜீவதி”** — தந்தை உயிருடன் இருந்தாலும் தாய்க்குரிய ஶ்ராத்தத்தைச் செய்ய வேண்டும் என்பது ஶாஸ்திர விதி. **செய்ய வேண்டிய ஶ்ராத்தத்தை விடுவதும் தவறு; அதிகாரமில்லாத தர்ப்பணத்தைச் செய்வதும் தவறு — ஶாஸ்திர விதியே இறுதித் தீர்ப

10 Oct 2026

மஹாளய அமாவாசை — முழுமையாக முடியாவிட்டாலும் பித்ரு கர்மத்தைத் தவறவிடாதீர்கள்!

முழுமையாக ஶ்ராத்தம் செய்ய முடியவில்லை என்பதால், பித்ரு தர்மத்தையே முழுமையாக விட்டுவிட வேண்டியதில்லை! அன்னம் இயலாவிட்டால் திலோதகம்; அதுவும் இயலாவிட்டால் தானம், கோக்ராஸம் என சாஸ்திரம் அனுகல்ப வழிகளைக் காட்டுகிறது. **வசதி குறையலாம்; ஆனால் பித்ருக்களுக்குச் செலுத்த வேண்டிய நன்றிக்கடன் குறையக்கூடாது!** மஹாளயத்தில் இயன்றதைச் சாஸ்திரப்படி செய்யுங்கள் — பித்ருக்களை மட்டும் மறந்துவிடாதீர்கள்!

10 Oct 2026

சுபஸ்வீகாரத்தை ‘ரிட்டர்ன் கிஃப்ட்’ விழாவாக மாற்றாதீர்கள்! பித்ரு கர்மத்தில் சாஸ்திரம் முக்கியமா? ஊர் வழக்கம் முக்கியமா?

சுபஸ்வீகாரம் என்பது வந்தவர்களுக்குப் பரிசுப்பெட்டி கொடுத்து அனுப்பும் விழா அல்ல; அது சாஸ்திர மரியாதையோடு அணுக வேண்டிய பித்ரு தர்மத்தின் தொடர்ச்சி! சாஸ்திரம் வகுத்த தானங்களை விட்டுவிட்டு, ‘ரிட்டர்ன் கிஃப்ட்’ கலாச்சாரத்தைச் சம்பிரதாயமாக மாற்றுவது தர்மமல்ல. பிரமாணமில்லாத செலவுகள் இன்று பழக்கமாகி, நாளை அடுத்த தலைமுறைக்கு ‘சாஸ்திரம்’ என்று கற்பிக்கப்படும் அபாயம் உண்டு! **தேவையற்றதைச் செய்து தேவையான தர்மத்தை இழக்காதீர்கள் — பித்ரு கர்மத்தில் பகட்டு வேண்டாம்; பிரமாணமே வேண்டும்!**

09 Oct 2026

குழந்தையும் தெய்வமும் ஒன்றா? அன்பின் பெயரால் அழிக்கப்படும் அடிப்படைத் தத்துவம்!

குழந்தை கள்ளமற்ற ஜீவனாக இருக்கலாம்; ஆனால் **கடவுளாக ஒருபோதும் ஆகிவிட முடியாது!** அன்பின் மிகுதியில் குழந்தையைத் தெய்வமாக்காதீர்கள் — **ஜீவன் வேறு; பரமாத்மா வேறு!** பசி, நோய், தூக்கம் கொண்ட குழந்தையை, சர்வசக்தனான பகவானுக்கு நிகராக்குவது தத்துவப் பிழை! **குழந்தையை நல்ல ஜீவனாக வளர்ப்போம்; பரமாத்மாவின் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டாம்!**

09 Oct 2026