தர்மம் சாஸ்திரம்

சந்தேகங்களும் விளக்கமும்

All ஜோதிடம் 21 தர்மம் சாஸ்திரம் 54 பித்ரு ஆராதனம் 20 வாஸ்து 7 வைதீகம் 16 ஸ்ரீவைஷ்ணவம் 34

குலதெய்வமும் அதன் பிரபாவமும் - குலதெய்வ வழிபாட்டிற்கு ஶாஸ்த்ர சான்றுகள்

குலதெய்வம் வெறும் குடும்ப வழக்கமல்ல; அதன் வேர்கள் இதிகாச–புராணங்களிலேயே பதிந்துள்ளன! **“குலதேவீ குலம் பாது”** — குலத்தைக் காப்பவளாகக் குலதேவியை ஶாஸ்த்ரம் போற்றுகிறது. குலரக்ஷணம், பரம்பரைத் தொடர்பு, சுபகர்மங்களில் ஆராதனை — இவையே குலதெய்வ மரபின் ஶாஸ்த்ர அடித்தளங்கள். **குலதெய்வத்தை அறிவோம்; பிரமாணத்தோடு அதன் பிரபாவத்தைப் புரிந்துகொள்வோம்!**

10 Oct 2026

தந்தை உயிருடன் இருக்கும்போது பித்ரு கர்மம் உண்டா? தாய் மறைந்திருந்தால் ஶாஸ்திரம் காட்டும் வழி என்ன?

தந்தை உயிருடன் இருப்பதால் மறைந்த தாயின் வருடாந்திர ஶ்ராத்தம் நின்றுவிடாது; அதை மகன் தவறாமல் செய்ய வேண்டும். ஆனால் தாயின் மறைவை முன்னிட்டு அமாவாசை, மாதப்பிறப்பு, மஹாளய பக்ஷத்தில் தந்தையை மீறித் தனியாகத் தர்ப்பணம் செய்யக்கூடாது. **“மாதுஃ ஶ்ராத்தம் ப்ருதக் குர்யாத் பிதர்யபி ச ஜீவதி”** — தந்தை உயிருடன் இருந்தாலும் தாய்க்குரிய ஶ்ராத்தத்தைச் செய்ய வேண்டும் என்பது ஶாஸ்திர விதி. **செய்ய வேண்டிய ஶ்ராத்தத்தை விடுவதும் தவறு; அதிகாரமில்லாத தர்ப்பணத்தைச் செய்வதும் தவறு — ஶாஸ்திர விதியே இறுதித் தீர்ப

10 Oct 2026

மஹாளய அமாவாசை — முழுமையாக முடியாவிட்டாலும் பித்ரு கர்மத்தைத் தவறவிடாதீர்கள்!

முழுமையாக ஶ்ராத்தம் செய்ய முடியவில்லை என்பதால், பித்ரு தர்மத்தையே முழுமையாக விட்டுவிட வேண்டியதில்லை! அன்னம் இயலாவிட்டால் திலோதகம்; அதுவும் இயலாவிட்டால் தானம், கோக்ராஸம் என சாஸ்திரம் அனுகல்ப வழிகளைக் காட்டுகிறது. **வசதி குறையலாம்; ஆனால் பித்ருக்களுக்குச் செலுத்த வேண்டிய நன்றிக்கடன் குறையக்கூடாது!** மஹாளயத்தில் இயன்றதைச் சாஸ்திரப்படி செய்யுங்கள் — பித்ருக்களை மட்டும் மறந்துவிடாதீர்கள்!

10 Oct 2026

சுபஸ்வீகாரத்தை ‘ரிட்டர்ன் கிஃப்ட்’ விழாவாக மாற்றாதீர்கள்! பித்ரு கர்மத்தில் சாஸ்திரம் முக்கியமா? ஊர் வழக்கம் முக்கியமா?

சுபஸ்வீகாரம் என்பது வந்தவர்களுக்குப் பரிசுப்பெட்டி கொடுத்து அனுப்பும் விழா அல்ல; அது சாஸ்திர மரியாதையோடு அணுக வேண்டிய பித்ரு தர்மத்தின் தொடர்ச்சி! சாஸ்திரம் வகுத்த தானங்களை விட்டுவிட்டு, ‘ரிட்டர்ன் கிஃப்ட்’ கலாச்சாரத்தைச் சம்பிரதாயமாக மாற்றுவது தர்மமல்ல. பிரமாணமில்லாத செலவுகள் இன்று பழக்கமாகி, நாளை அடுத்த தலைமுறைக்கு ‘சாஸ்திரம்’ என்று கற்பிக்கப்படும் அபாயம் உண்டு! **தேவையற்றதைச் செய்து தேவையான தர்மத்தை இழக்காதீர்கள் — பித்ரு கர்மத்தில் பகட்டு வேண்டாம்; பிரமாணமே வேண்டும்!**

09 Oct 2026

குழந்தையும் தெய்வமும் ஒன்றா? அன்பின் பெயரால் அழிக்கப்படும் அடிப்படைத் தத்துவம்!

குழந்தை கள்ளமற்ற ஜீவனாக இருக்கலாம்; ஆனால் **கடவுளாக ஒருபோதும் ஆகிவிட முடியாது!** அன்பின் மிகுதியில் குழந்தையைத் தெய்வமாக்காதீர்கள் — **ஜீவன் வேறு; பரமாத்மா வேறு!** பசி, நோய், தூக்கம் கொண்ட குழந்தையை, சர்வசக்தனான பகவானுக்கு நிகராக்குவது தத்துவப் பிழை! **குழந்தையை நல்ல ஜீவனாக வளர்ப்போம்; பரமாத்மாவின் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டாம்!**

09 Oct 2026

உனக்குப் பிடித்த பெருமாளை உயர்த்த — இன்னொரு பெருமாளைத் தாழ்த்த வேண்டுமா?

உனக்குப் பிடித்த பெருமாளைப் போற்றுவது பக்தி; அதற்காக இன்னொரு சந்நிதியைத் தாழ்த்துவது பக்தியல்ல! உனக்கு நடந்த ஓர் அனுபவம் அருளாக இருக்கலாம்; ஆனால் அது ஒருபோதும் அனைவருக்குமான சாஸ்திரமாகிவிடாது! பிரமாணமில்லாத விரதங்களையும், “இங்கே வந்தால்தான் நடக்கும்” என்ற நம்பிக்கைகளையும் உருவாக்குவது ஆன்மிக வழிகாட்டுதல் அல்ல! **திருக்கோலங்கள் ஆயிரம்; பரம்பொருள் ஒருவன் — பக்தியை வளர்ப்போம், பகவானுக்குள் பேதத்தை அல்ல!**

09 Oct 2026

உங்கள் வயது பிரமாணமல்ல; உங்கள் பயமுறுத்தல் சாஸ்திரமல்ல! “எங்களுக்குச் செய்தார்கள்; நீங்களும் செய்தே ஆகவேண்டும்!” — தர்மத்தின் பெயரால் துக்கத்தில் இருப்பவர்களைத் துன்புறுத்தாதீர்கள்!

**“எங்களுக்குச் செய்தார்கள்” என்பது சாஸ்திரமல்ல; “நான் பெரியவன்” என்பது பிரமாணமல்ல!** பிள்ளைகளைக் காட்டிப் பயமுறுத்தி, துக்கத்தில் இருப்பவர்களின் மனதைச் சிதைப்பது ஆசாரமல்ல — கொடிய அதர்மம்! **தந்தையோ, தாயோ, குடும்பப் பெரியவரோ — சாஸ்திரத்திற்கு மேல் எவருடைய வார்த்தையும் இல்லை!** தவறு தலைமுறைகளாகத் தொடர்ந்தாலும் அது தர்மமாகாது — **“தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே” — சாஸ்திரமே இறுதிப் பிரமாணம்!**

08 Oct 2026

மரணம் இரண்டு நாளில் முடியும் நிகழ்வு அல்ல — ஒரு வருஷம் நீளும் பித்ரு தீக்ஷை!

தகனத்தோடு முடிவதல்ல பித்ரு கடமை; அங்கிருந்துதான் தொடங்குகிறது புத்ரனின் பித்ரு தர்மம்! தசாஹம், ஏகோத்திஷ்டம், ஸபிண்டீகரணம் — இவை சடங்குகள் மட்டுமல்ல; சாஸ்திரம் வகுத்த பித்ரு பரிபாலனப் படிநிலைகள்! மாஸிகம் முதல் ஆப்திகம் வரை ஒவ்வொன்றும் உரிய திதியிலேயே நிகழ வேண்டும்; ஆங்கிலத் தேதி ச்ராத்தத்திற்கு அளவுகோல் அல்ல! **பெற்றவர்கள் மறையலாம்; அவர்களுக்குச் செய்ய வேண்டிய தர்மம் மறையக்கூடாது — அதுவே உண்மையான பித்ரு பக்தி!**

08 Oct 2026

வேதமும் பகவானும் வேறல்ல — வேதஸ்வரூபனே ஸ்ரீமந்நாராயணன்

**வேதம் பகவானைப் பற்றிப் பேசும் நூல் மட்டுமல்ல — “வேதோ நாராயண: ஸாக்ஷாத்”; வேதமே சாக்ஷாத் நாராயணன்!** **“வேதைஶ்ச ஸர்வைரஹமேவ வேத்ய:” — எல்லா வேதங்களும் இறுதியில் அறியச் செய்வது ஸ்ரீமந்நாராயணனையே!** அநாதியான பகவானைப் போலவே அவனது சப்தஸ்வரூபமான வேதமும் அநாதி; வேதவழியில் நடப்பது அவனது ஆஜ்ஞைப்படி வாழ்வதாகும். **வேதத்தின் தொடக்கம் அவன்; வேதத்தின் பொருள் அவன்; வேதம் காட்டும் வழியும் அவனே; அந்த வழியின் பரமகதியும் ஸ்ரீமந்நாராயணனே!**

08 Oct 2026

கணவனை இழந்த பெண்ணின் வளையலை உடைப்பது சாஸ்திரமா? சோகத்தில் இருக்கும் பெண்ணைச் சடங்கு என்ற பெயரில் வதைக்காதீர்கள்!

கணவனை இழந்தவளின் துயரமே போதும்; **“சம்பிரதாயம்” என்ற பெயரில் அவள் வளையலையும் மனதையும் சேர்த்து உடைக்காதீர்கள்!** வளையலைத் தட்டி உடைக்கவும், பிறர் மாங்கல்யத்தை அறுக்கவும் சாஸ்திரப் பிரமாணம் எங்கே? — **இருந்தால் மூலவாக்கியத்தைக் காட்டுங்கள்!** ஊர் வழக்கமும், சமூக ஊடகப் பேச்சும், மூடப்பழக்கமும் ஒருபோதும் **வேத–சாஸ்திர விதியாகிவிடாது!** **பிரமாணம் இல்லையா? அந்தப் பழக்கத்தை மூட்டை கட்டி ஓரமாக வையுங்கள் — பெண்ணின் கண்ணீரைச் சடங்காக்காதீர்கள்!**

08 Oct 2026