தர்மம் சாஸ்திரம்

சந்தேகங்களும் விளக்கமும்

All ஜோதிடம் 21 தர்மம் சாஸ்திரம் 54 பித்ரு ஆராதனம் 20 வாஸ்து 7 வைதீகம் 16 ஸ்ரீவைஷ்ணவம் 34

திருமணமான பெண்ணுக்கும் பித்ரு தர்மம் உண்டு! பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் அவளுக்குரிய கடமை என்ன?

திருமணம் ஆனதால் பிறந்த வீட்டுப் பித்ரு தர்மம் முடிந்துவிடுவதில்லை; பெண்ணின் தர்மப் பொறுப்பு இன்னும் விரிவடைகிறது! பெற்ற தாய்–தந்தையரைப் பராமரிப்பதும், அவர்களுக்குப் பிற்காலப் பித்ரு கைங்கரியம் குறையாமல் பார்த்துக்கொள்வதும் அவளுடைய கடமை. புகுந்த வீட்டில் மாமனார்–மாமியாரைச் சுஶ்ரூஷிப்பதும், கணவனின் பித்ரு கர்மங்களுக்கு உறுதுணையாக இருப்பதும் இல்லற தர்மம். **பிறந்த வீட்டை மறக்காமலும், புகுந்த வீட்டுப் பித்ரு தர்மத்தைக் கைவிடாமலும் வாழ்வதே ஒரு பெண்ணின் உயர்ந்த பித்ரு பரிபாலனம்!**

07 Oct 2026

“அப்பா அம்மாவுக்கு எதுவுமே செய்ய முடியவில்லையே!” என்று அழாதே! அவர்கள் சென்றபின் செய்ய வேண்டிய பித்ரு தர்மத்தை தவறவிடாதே!

**“அப்பா அம்மாவுக்கு எதுவும் செய்யவில்லையே!” என்று அவர்கள் மறைந்தபின் அழுவது மட்டும் பித்ரு பக்தியல்ல!** உயிருடன் இருக்கும்போது பராமரிப்பதும், மறைந்தபின் சிராத்தம், தர்ப்பணம், மாசிகம், ஆப்திகம் முதலியவற்றைத் தவறாமல் செய்வதுமே உண்மையான புத்ர தர்மம். **அமாவாசை, மாதப்பிறப்பு, மஹாளயம், வருடாந்திர திதி — இவை வெறும் சடங்குகள் அல்ல; பித்ருக்களுக்குச் செலுத்தும் தர்மக் கடன்!** **பெற்றோர் மறைந்துவிடலாம்; ஆனால் அவர்களிடம் ஒரு புத்ரனுக்குள்ள பித்ரு தர்மம் ஒருபோதும் மறைந்துவிடுவதில்லை!**

07 Oct 2026

ஒரு நாள் கைங்கரியத்தை இழந்தால் — ஒரு நாள் வாழ்க்கையையே இழந்ததுபோல் வருந்து!

**“ஒரு நாள் கைங்கரியம் செய்யாவிட்டால் என்ன?” — இந்த எண்ணமே ஆன்மிக வீழ்ச்சியின் ஆரம்பம்!** பகவானுடைய கைங்கரியம் தவறுவது ஒரு வேலையைத் தவறவிடுவதல்ல; **வாழ்க்கையின் மிக உயர்ந்த பாக்கியத்தையே இழப்பதாகும்!** நீ செய்யாவிட்டால் கைங்கரியம் நின்றுவிடாது; வேறொருவருக்குப் பாக்கியம் செல்லும் — *இழப்பு முழுவதும் உனக்குத்தான்!* *“ஒழிவில் காலமெல்லாம் வழுவிலா அடிமை” — இதுவே வாழ்க்கையாகட்டும்; கைங்கரியம் இல்லாத நாள் இழந்த நாளாகட்டும்!*

02 Oct 2026

நான் கைங்கரியம் செய்தேனா? "இல்லை, செய்யும் பாக்கியம் உனக்குக் கொடுக்கப்பட்டது!"

பகவானுக்குக் கைங்கரியம் செய்வது நம் பெருமையல்ல; **அவன் நமக்குத் தந்த அரிய பாக்கியம்!** “நான் செய்தேன், நான் கொடுத்தேன், எனக்கு மட்டும் மரியாதை கிடைத்தது” என்ற தற்பெருமை கைங்கரியத்தின் புனிதத்தையே கெடுத்துவிடும். *அவன் கொடுத்த உயிரையும் பொருளையும் வைத்துக்கொண்டு, அவனுக்கே கொடுத்ததாகப் பெருமை பேச நமக்கு என்ன உரிமை?* கைங்கரியம் பெருமாளுக்காக இருக்கட்டும்; **ஒருபோதும் நம் புகழுக்காக இருக்க வேண்டாம்!**

02 Oct 2026

பிறர் குறை காணாதிருத்தல் — பாகவதனின் அடிப்படை தர்மம்!

**பிறர் குறை காணாதிருப்பது மனித தர்மம்; பாகவதனுக்கு அது அடிப்படை இலக்கணம்!** பாகவதனின் பிறப்பையும் கடந்த காலத்தையும் ஆராயாதே; அவனுடைய பகவத் சம்பந்தத்தை மட்டும் பார்! **குறை தெரிந்தால் ஊருக்குச் சொல்லாதே; திருத்த நினைத்தால் தனிமையில் இதமாகச் சொல்!** பகவான் குற்றங்களை அகற்ற வல்லவன்; **நாம் அவற்றைப் பட்டியலிடுவதற்காகப் பிறக்கவில்லை!**

02 Oct 2026

விரதம் என்பது வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வழிபாடு அல்ல! சங்கல்பித்த நியமத்தைச் சௌகரியத்திற்காக மாற்றுவது விரதமல்ல!

**“முடியவில்லை… பால் குடித்தேன்; பழம் சாப்பிட்டேன்!” — இது விரதமா, சௌகரியமா?** சங்கல்பித்த நியமத்தை மனம்போனபடி மாற்றிக்கொள்வதற்கு பெயர் விரதம் அல்ல! பரான்னம், மது, மாம்சம், மைதுனம் முதல் மனம்–வாக்கு–இந்திரியங்கள் வரை விரதத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. **விரதம் என்பது பட்டினி கிடப்பதல்ல; சாஸ்திரம் விதித்த நியமத்தில் கடைசிவரை நிலைத்திருப்பது!**

02 Oct 2026

இல்லத்தின் எல்லைக்குள் பூனை வேண்டாம்! வாசலில் காருண்யம் இருக்கட்டும்.

**ஜீவனுக்குச் சோறு போடுவது தர்மம்; இல்லத்தின் ஆசாரத்திற்குள் கொண்டு வருவது தர்மமல்ல!** பூனைக்குக் காருண்யம் காட்டுங்கள் — ஆனால் மடி, படுக்கை, சமையலறை, பூஜையறை வரை அனுமதிக்காதீர்கள்! **சகுனம் முதல் ஶ்ராத்தம் வரை ‘மார்ஜாரம்’ குறித்து ஶாஸ்திரம் வகுத்திருக்கும் எல்லைகள் மிகத் தெளிவானவை.** வாசலில் காருண்யம் இருக்கட்டும்; **இல்லத்தில் ஆசாரம் நிலைக்கட்டும்!**

01 Oct 2026

அரைகுறை அறிவுக்கு ஆணவம் அதிகம்! கற்றவனை ஏளனம் செய்து, மற்றவனை குருவாக்கும் காலத்தின் "மிகப்பெரிய அவலம்!"

**அரைகுறை அறிவுக்கு ஆணவம் அதிகம்; முழுமையான அறிவுக்கு பணிவே அடையாளம்!** நுனிப்புல் மேய்ந்துவிட்டு, “எனக்கு எல்லாம் தெரியும்” என்று மார்தட்டுவது ஞானமல்ல! கற்றவனை ஏளனம் செய்து, கண்டவனை குருவாக்கி, பிடித்ததையெல்லாம் உண்மையாக்குவது அறிவீனம்! **அறியாமை குறையல்ல; அறியாமையையே அறிவென்று கொண்டாடுவதுதான் மிகப்பெரிய அவலம்!**

01 Oct 2026

மஹாளயத்தில் தர்ப்பணம் மட்டும் போதுமா? — பதினாறு நாட்கள் கர்த்தா எப்படி வாழ வேண்டும்?

மஹாளயத்தில் தர்ப்பணம் செய்துவிட்டால் மட்டும் பித்ருகர்மம் முடிந்துவிடாது! உணவு முதல் உறக்கம் வரை கர்த்தாவின் வாழ்க்கைக்கே சாஸ்திரம் நியமம் வகுத்துள்ளது. பரான்னம், பயணம், பகலுறக்கம், க்ஷவரம், மைதுனம் — எதற்கெல்லாம் தடை தெரியுமா? பதினாறு நாட்களும் பித்ருக்களை ஆராதிப்பவன் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பிரமாணத்தோடு அறிந்துகொள்ளுங்கள்!

01 Oct 2026

“என் மனசுக்குச் சரின்னு தோணுது!” — அப்படியானால் ஶாஸ்திரம் எதற்கு?

**“என் மனசுக்குச் சரின்னு தோணுது!” — அதுவே தர்மமாகிவிடாது!** மனம்போன போக்கிற்கு **பக்தி** என்றும், சௌகரியத்திற்கு **ஶாஸ்திரம்** என்றும் பெயர் வைக்காதீர்கள்! **“பகவான் ஏற்றுக்கொள்வார்” என்று பகவானின் பெயரில் நாமே தீர்ப்பு எழுதுவது பெரும் தவறு!** எது சரி, எது தவறு என்பதை மனம் தீர்மானிக்காது — **ஶாஸ்திரமே தீர்மானிக்கும்!**

01 Oct 2026